பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
04:04
சூலூர்: ராம நவமியை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடந்தன. அவதார புருஷன் ராமரின் ஜெயந்தி விழா, ராம நவமியாக, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சூலூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் ராம நவமியை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் பஜனை மடத்தில், ராமபிரான் திருவுருவ படம் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பஜனை நடந்தது.
ராம நவமியை ஒட்டி கபசுர குடிநீர்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சூலூர் வட்டாரத்தில், பள்ளபாளையம், சூலூர், பட்டணம், பீடம்பள்ளி பகுதிகளில் ராம நவமி கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜபம் நடந்தது. சூலூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாநில இணைச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மோகன், மணியன், ஆடிட்டர் வெங்கட்ராமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.