ராவணனுடன் நடந்த போரில் 14 ஆயிரம் வீரர்களை தனி ஒருவனாக அழித்தார் ராமர். அப்போது ராவணனின் படையில் இருந்த அகம்பணன் (நடுக்கம் என்பதே அறியாதவன்) ராமனை கண்டு அஞ்சி, உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்து ராவணனிடம் முறையிட்டான், அரசே, ராமன் அசகாய சூரனாக இருக்கிறான். அவன் விடும் பாணங்கள் காட்டு வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதாக இருக்கின்றன. கரன், துாஷணன் கூட மாண்டு விட்டனர் என்று தலைகுனிந்தான். உரக்க சிரித்தபடியே ராவணன் கேட்டான், நீ மட்டும் எப்படி தப்பித்தாய்? ராமன் ஏகபத்தினி விரதன் என்பதை சாதகமாக்கி கொண்டு, ஒரு பெண்ணைப் போல வேடமிட்டு நின்றேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை என்றான்.