குன்றத்துார் மலை மீது, பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.
அறங்காவலர் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின், 2024ம் ஆண்டு முதல், 10 நாட்கள் பிரம்மோத்சவ விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக, மாசி பிரம்மோத்சவ விழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் நான்காம் நாளான நேற்று காலை, நாக வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.