உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் செல்லப்பா சுவாமிகளின் ஜீவசமாதி கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை மூலவர் மற்றும் சிவலிங்கத்திற்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் திரவியப் பொடிகளால் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சிவபுராணம் சித்தர் பாடல்கள் பாடப்பட்டது. பூஜைகளை பூஜகர் கிருபாகரன் செய்திருந்தார். இரவில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.