ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சூடிக்கொடுத்த நாச்சியார் சமேத ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த 27 ஆம் தேதி முதல் சுதா்சன ஹோமம், துவார பூஜை, வேத விண்ணப்பம், முதல்கால யாக பூஜை ஆகியன தொடங்கப்பட்டு, புதன்கிழமை வரை ஹோம பூஜைகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் காலை 5.00 மணிக்கு தொடங்கி, காலை 8.30 மணிக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் விமானம், மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, தீா்த்தம் தெளிக்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, ராஜகோபால சுவாமி கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.