ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல், இளங்கண்ணன் அய்யனார், முனீஸ்வரர் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீப ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவில் கிராம தலைவர் கோவிந்தன், சோழந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.