திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது. இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.