அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய குரு தேக் பகதூர் 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார். சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாவில் ஒன்றான குரு தேக் பகதூர் பிறந்த தினம். இதனையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவரது பிறந்த நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவரது சேவை குறித்து புகழாரம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில்: மனித குலத்தை காத்தி கொடுங்கோன்மைக்கு எதிராக போராடியவர் குரு தேக் பகதூர். அவரது உயர்ந்த தியாகத்தால் இன்றும் அழியாமல் இருக்கிறார். என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்; ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கை, இலட்சியங்கள் மற்றும் உயர்ந்த தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. பணியே குறிக்கோளாக கொண்டு வாழ்வை வாழ்ந்தவர். என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று காலையில் எவ்வித முன் அறிவிப்பும் கூடுதல் பாதுகாப்பும் இல்லாமல் டில்லியில் குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.