ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பினாகூடூர்லங்க பகுதியைச் சார்ந்த விவசாயி விஜயராம் என்பவர் கடந்த வாரம் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளைச் சந்தித்தார்.தனது ஆர்கானிக் நிலத்தில் விளைந்த அரசி,காய்கறி பழங்கள் பசு நெய் உள்ளீட்டவைகளை நன்கொடையாக வழங்கவிருப்பதாக தெரிவித்தார்.
அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததன் பேரில் 2ஆயிரத்து 200 கிலோ அரிசி காய்கறி பழம் மற்றும் 15 கிலோ பசு நெய் போன்றவைகளை வழங்கினார். இவைகளை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தேவஸ்தானத்தின் சார்பில் நடைபெறும் அன்னபிரசாதத்தில் அரிசியை பயன்படுத்த அனுமதித்து உள்ளனர் இதன் தரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஆர்கானிக் பொருட்களை அது சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வாங்கி உபயோகிக்கவும் முடிவு செய்துள்ளனர்.நெய்யை நைவேத்தியத்திற்கு பயன்படுத்த உள்ளனர். ஓரு முன்மாதிரியாக வந்துள்ள இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் விவசாய பொருட்களை முழுமையாக பயன்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது வரவேற்க வேண்டியதுதான்.