பதிவு செய்த நாள்
01
மே
2021
03:05
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் விநாயகர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.பெண்ணாடம்புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், காலை 10:45 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர் சுவாமிக்கு அபிேஷகமும், 11:00 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது.பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.