பதிவு செய்த நாள்
01
மே
2021
03:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சமத்துார் சத்திய ஞான சபை சார்பில், ஒரு ஆண்டாக முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு மார்ச்சில், கொரோனா பரவலை தடுக்க, நாடு தழுவிய ஊரடங்கு அமலானது. அப்போது, ஏழைகள், ஆதரவற்ற முதியவர்கள் உணவுக்கு பரிதவித்தனர். அவர்களுக்கு உதவும் விதமாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், தனி நபர்கள் உணவு வழங்கி உதவி செய்தனர்.ஊரடங்கில் தளர்வுகள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், உணவு வழங்கும் உதவிகள் நின்று விட்டன. ஆனால், சமத்துார் ராமலிங்கர் அறக்கட்டளையின், சத்திய ஞான சபை சார்பில், கடந்தாண்டு ஏப்ரலில் ஏழைகள், முதியவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டு, ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வருகிறது.தற்போது, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், பலரும் இந்த அன்னதானத்தால் பயன்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.