பதிவு செய்த நாள்
01
மே
2021
04:05
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலைவிநாயகர் கோவிலில் காலை, 6:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம், பூஜை செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டது. பின், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கோவில் பூட்டி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் காலை, 7:30 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது. இதனால் சுவாமியை வழிபட வந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வ கணபதி விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.