திருவாடானை கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2021 04:05
திருவாடானை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்களும், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனைகளும் நடந்தது.
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வல்லபை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் வல்லபை விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்கவில்லை. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.