தனது தவத்தை கலைத்த மன்மதனை அழித்தார் சிவன். கலங்கிய மன்மதனின் மனைவி ரதி வழிபாடு செய்யவே, அவன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக சிவன் விமோசனம் கொடுத்தார். காமன் என்னும் மன்மதனை உயிர்ப்பித்த சிவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் உள்ளது. இங்கு அஷ்ட (எட்டு) பைரவர் சன்னதி விசேஷம். இவர்களில் அசிதாங்க பைரவர் சூரியனுடனும், சண்டபைரவர் சந்திரனுடனும், பீஷண பைரவர் பீட வடிவிலும் காட்சி தருகின்றனர். கபால பைரவர் ராஜகோபுர உச்சியில் இருக்கிறார்.