* சிவன் என்ற சொல்லுக்கு ‘மங்களம் தருபவர்’ என்று பொருள். * ஜீவன் (உயிர்கள்) ஒவ்வொருவரும் சிவனாக முடியும். ஆசைகளை வேரறுத்தால் அந்த உயர்நிலை கிடைக்கும். * சிவபக்தர்களின் அடையாளம் திருநீறு. சாம்பலான இ வாழ்வின் நிலையாமையைக் குறிக்கிறது. * சிவலிங்கம் என்பது சிவனின் ஜோதி வடிவம். மேலுள்ள பாணம் ஆணையும், கீழுள்ள ஆவுடையார் (பீடம்) பெண்ணையும் குறிக்கும். இதுவே உலகைப் படைக்கும் வடிவம். * சிவனை ‘திரியம்பகன்’ என்பர். ‘அம்பகம்’ என்றால் ‘கண்’. சிவனுக்கு அக்னி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்கள் உண்டு. * ‘பிரதோஷம்’ என்ற சொல்லுக்கு ‘இரவுக்கு முந்தைய நேரம்’ எனப் பொருள். * பாற்கடலை கடைந்த தினம் சனிக்கிழமை என்பதால், சனிப்பிரதோஷம் முக்கியத்துவம் பெறுகிறது. * வானம் நமக்கு தந்தை, பூமி நமக்கு அன்னை. இதற்கு அதிபதி சிவன். எனவே அவரை ‘அர்த்தநாரீஸ்வரர்’ என அழைக்கிறோம்.