புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் சித்திறை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்கவில்லை. தேவசேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் பூஜைகளை செய்தனர்.