பதிவு செய்த நாள்
10
மே
2021
02:05
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடந்தது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கை கருத்தில் கொண்டு, ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் இந்த ஆண்டு சித்திரைமாத குருபூஜை ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் யாரும் குரு பூஜைக்கு வரவேண்டாம் என்று கோயில் நிர்வாகத்தினர்தெரிவித்தனர். ஏரல், சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் தை, ஆடி அமாவாசைதிருவிழாவிற்கு அடுத்தபடியாக, விமர்சையாகநடக்கும் விழா சித்திரைமாத குரு பூஜையாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரைமாத குருபூஜைக்கு முன்தினம் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு கொண்டு வரும் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை கொண்டு சமைக்கப்பட்டு, சுவாமிக்கு படைக்கப்பட்டு பின்னர், அன்னதானமும் நடக்கும். குருபூஜையன்று சுவாமிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனை நடக்கும். இந்த ஆண்டு வரும் 12ம் தேதி, குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கைகருத்தில் கொண்டு, குருபூஜை விழா முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என்று பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோயிலில் வருஷாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடந்தது. கோயிலில் கோபுரத்திற்கு புனிதநீர், இளநீர், பால், பன்னீர்அபிஷேகம் நடந்தது. கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டிய நாடார் வருஷாபிஷேகத்தை நடத்தினார்.