பதிவு செய்த நாள்
10
மே
2021
02:05
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீசத்ய சாய் அமுதம் என்ற திட்டத்தில், வீடு தேடிச் சென்று, ஏழு நாட்கள் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
உலகில் வாழும் அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழுங்கள். அன்பை மட்டும் தவறாமல் செலுத்துங்கள். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, இறைவன் உங்களிடத்தில் அதைவிட பல மடங்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார். தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள் என்பது, பகவான் ஸ்ரீ சாய்பாபா அறிவுரை. கொரோனா கோர தாண்டவமாடும் இந்த காலத்தில், மானுட சேவையே மாதவ சேவை என்பதில், மாற்றுக் கருத்தில்லை. நாடு முழுவதும், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குடும்பத்தில் ஒருவர் தொற்று ஏற்படும்போது, உடலளவில் பாதிக்கப்படுகிறார்; மற்ற உறுப்பினர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். சமைத்து சாப்பிட முடியாத நிலையில், ஏராளமானோர் தவிக்கின்றனர். அவர்கள், உதவி கேட்க தயக்கப்படுகின்றனர். தொற்று பயம் காரணமாக, அண்டை வீட்டார், உறவினர்கள் கூட உதவிக்கரம் நீட்ட தயங்குகின்றனர். நோயின் கொடுமையை ஒருபுறம் அனுபவிக்க, தனிமை சூழலில், உணவுக்கு தவிக்கும் நிலை உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் வகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஸ்ரீசத்ய சாய் அமுதம் என்கிற, மனிதநேய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஏழு நாட்கள் இலவச உணவு வழங்கும் சேவையை, பகவான் ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் துவங்கியுள்ளன.
தொலைபேசியில் அழைக்கலாம்!
தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் போதும். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு உணவு வேண்டுமோ, அத்தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று, உணவை வாசலில் வைத்து விட்டு, மொபைல் போனில் தகவல் தெரிவிப்பர். ஒரே நேரத்தில், இரு வேளைக்கு தேவையான அளவு உணவு, மதிய வேளையின்போது வழங்கப்படுகிறது. பயனாளி யாரென தன்னார்வலர்கள் பார்ப்பதில்லை; அவர்களும் தன்னார்வலர்களை பார்க்க முடியாது.
முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி, பயனாளி வீட்டு வாசல் வரை கொண்டு உணவு சேர்ப்பிக்கப்படுகிறது.வீட்டு முறைப்படி, தரமாக உணவு தயாரித்து, வழங்கப்படுகிறது. கலவை சாதம், காய்கறி பிரியாணி, மிளகு சாதம், புளியோதரை, சாம்பார் சாதம் உட்பட ஏதேனும் ஒரு சாதம் மற்றும் ஒரு கூட்டு, பொரியல், சுண்டல், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் வழங்கப்படுகிறது. கடந்த, 6, 7ம் தேதிகளில் மட்டும், 3,655 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என, பகவான் ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொலைப்பேசி எண்கள்:
கோவை - 9345225024, 8608936720, 9443898987, 9443159614, 9842235514
நீலகிரி - 9843085424, 9787821306, 9159061230, 9750677000
திருப்பூர் - திருப்பூர் சிட்டி - 9367144955, 9487515709, 9443242956
திருநெல்வேலி - பாளையங்கோட்டை, பெருமாள்புரம், கே.டி.சி. நகர், சாந்தி நகர், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி ஜங்ஷன் - 9487254783, 7639905544, 9698927868, 9994058666
தூத்துக்குடி - கோவில்பட்டி டவுன் - 9944142458, 9443868774, 9790400468
கோவில்பட்டி கிழக்கு - 8838236500, 9245294616, 9865581360
கோவில்பட்டி வடக்கு - 9442132521
கயத்தார் - 9788856118
விளாத்திக்குளம் - 9894126776, 9486014084
சிவஞானபுரம், நமச்சிவாயபுரம் - 8903481244, 6382439696
குருவார்பட்டி, நாகலாபுரம் - 9500623611
ஆறுமுகநேரி, காயல்பட்டினம் - 9442874086
ஆத்தூர், முக்காணி - 7598753573, 9443327551
ஏரல், சிவகளை - 9486557406, 9965180206
மதுரை - 9442170037, 9944339418
திண்டுக்கல் - 9965532750, 7448858687, 7010860650, 8667204745
கொடைக்கானல் - 9565955699, 9442291644
சிவகங்கை - 9788540253
காரைக்குடி - 9443130431
ஸ்ரீராம் நகர், கோட்டையூர் 9500786051
தேவகோட்டை - 8148258860
மானாமதுரை - 9488741532
தேனி, பி.சி.பட்டி - 9943998986
கம்பம் - 9942404183
போடி - 9944527952
பெரியகுளம் - 9865306618
விருதுநகர் - 9942118444, 9788726359
ராஜபாளையம் - 9842055569, 9500334440
ஸ்ரீவில்லிபுத்தூர் - 9944373327, 9442841043
சிவகாசி - 9715033465, 9442665743
விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி - 9344999657