புனர்பூசம் - 4: சொல்லாற்றல் மிக்க புனர்பூச நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவர். இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். அரசியல்துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 01 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 11
பூசம்: எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய பூசம் நக்ஷ்த்திர அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பம் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினர் வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 02 அதிர்ஷ்ட தினங்கள்: மே - 15; ஜூன் 12
ஆயில்யம்: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமராகிய ஆயில்ய நக்ஷ்த்திர அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பம் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினர் கவனமாக பேசுவது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 03 அதிர்ஷ்ட தினங்கள்: மே - 16; ஜூன் 13
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »