Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : வைகாசி மாத பலன்கள் மேஷம்: ஆனி ராசிபலன் மேஷம்: ஆனி ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம் : வைகாசி மாத பலன்கள்
எழுத்தின் அளவு:
மீனம் : வைகாசி மாத பலன்கள்

பதிவு செய்த நாள்

13 மே
2021
10:05


பூரட்டாதி - 4: எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த பூரட்டாதி நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினர் புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசியல்துறையினருக்கு செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும்.  மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 23
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 01

உத்திரட்டாதி: கனிவே பெருமை என்பதற்கேற்ப கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் உத்திரட்டாதி நக்ஷ்த்திர அன்பர்களே, மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். தொழிலாளிகள் தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு சிறிது தாமதப்பட்டாலும், கைக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். குடும்பம் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். கலைஞர்கள் தங்கள் திறமையை  நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.  சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்
சந்திராஷ்டம தினங்கள்: மே - 24
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 02

ரேவதி: நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் வளமும் நலமும் பெறும் ரேவதி நக்ஷ்த்திர அன்பர்களே, இதுவரை செயல்படாமல் மூடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருச்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். தொழிலதிபர்கள்: புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப  பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.  புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குடும்பம் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்கள் முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 25
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 03

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar