நாகர்கோவில் : கொரோனா பரவலை தடுக்கவும் அதற்கு பணியாற்றும் மருத்துவ துறையினரின் முயற்சி வெற்றி பெறவும் குமரி மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று யாகம் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து கோயில் கூட்டமைப்பு சார்பில் மிருத்யஞ்சய மகா மந்திர ஜெப வேள்வி யாகம் நேற்று தொடங்கியது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தனிமனித இடைவெளியுடன் கொரோனா கட்டுபாடுகளுடன் வேள்வியில் ஈடுபடுகின்றனர். தொடக்க நிகழ்ச்சியாக குலசேகரம் தும்பகோடு அச்சாளீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் வேள்வி நடந்தது. இதனை கிருஷ்ணன் போற்றி நடத்தினார்.ஹிந்துக்கோயில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீபதி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 41 நாட்கள் நிறைவடைந்த பின் மகா யாகம் நடைபெறும். இல்லங்களில் பூஜிக்கப்பட்ட எள் சேகரிக்கப்பட்டு வேள்வியில் சமர்பிக்கப்பட உள்ளது.