கோபேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், குளிர்காலம் முடிந்த நிலையில் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் ஈஸ்வர் பிரசாத் நம்பூதிரி கோவில் நடையைத்திறந்து, மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். இதில் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.