திருமலை: திருப்பதியில் பெருமாளை தரிசிக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னுாறு ரூபாய் டிக்கெட்டில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் அதுவும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி ஜீன் மாதத்திற்கான டிக்கெட் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது. மேலும் விவரத்திற்கு https://www.tirumala.org/ என்ற வலைதளத்தில் பார்க்கவும்.