திருப்பதி: கொரோனா தொற்றில் இருந்து உலகம் மீளவேண்டும் மக்கள் மீண்டும் அமைதி ஆனந்தம் நிம்மதியைப் பெறவேண்டும் என்று பெருமாளை வேண்டிக் கொள்ளும் வகையில் கடந்த 16 நாட்களாக இந்த யாகம் நடந்தது. யாகத்தில் கலந்து கொண்ட பண்டிதர்களால் 26 லட்சம் முறை வேதமந்திரங்கள் சொல்லப்பட்டது. 18ம் தேதி மகா பூர்ணாகுதியுடன் யாகம் நிறைவு பெற்றது. இது போன்ற யாகம் திருமலை கோவிலைத் தொடர்ந்து திருமலை கோயிலின் ஆளுகைக்குட்பட்ட மற்ற கோவில்களிலும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.