பதிவு செய்த நாள்
22
மே
2021
03:05
சென்னை: இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரஹணம், 26ம் தேதி நிகழ உள்ளது.
சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும்.இதுவே, சந்திர கிரஹணம். இந்தாண்டின் முதல் சந்திர கிரஹணம், 26ம் தேதி பவுர்ணமியன்று நிகழ உள்ளது. கிரஹணம் அன்று பிற்பகல், 3:15 மணிக்கு துவங்கி மாலை, 6:22க்கு முடிகிறது. இது, நீண்ட சந்திர கிரஹணமாக அமைந்தாலும், இந்தியாவில், கோல்கட்டாவை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. கோல்கட்டாவிலும் மாலை, 6:15 முதல், 6:22 மணி வரை, 7 நிமிடங்கள் மட்டுமே தெளிவில்லாமல் தெரியும். தமிழகத்தில் சந்திர கிரஹணத்தை பார்க்க முடியாது. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா, மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், முழு சந்திர கிரஹணம் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.