முருகப்பெருமான் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும் வேல் நினைவில் வரும். ‘வேல்’ என்றால் ‘வெற்றி’ என்று பொருள். வேலினைக் கையில் பிடித்திருப்பதைக் கருத்தில் கொண்டு ‘‘முருகனுக்கு வேல்! வேல்! கந்தனுக்கு வேல்! வேல்!’’, ‘‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’’ என்று பக்தர்கள் சரணகோஷம் எழுப்புவதைக் காணலாம். வெற்றி இருக்கும் இடத்தில் வடிவேலன் இருப்பான். பாம்பன் சுவாமிகள் ‘வேலு(ம்) மயிலும்’ என்ற மந்திரத்தை உபதேசித்தார். இதை சொல்வோருக்கு முருகனின் வேல் எப்போதும் துணையாக நிற்கும். இதை உச்சரிக்கும் போது ‘ம்’ என்ற எழுத்தை ஓசை குறைத்து செல்ல வேண்டும். வேலாயுதத்தை வழிபடுவோருக்கு, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் அஞ்சி ஓடும்.