மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாவட்டகிளை சார்பில் காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தியையொட்டி பேச்சியம்மன் படித்துறையில் துாய்மை பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. மாநில இணை பொதுச்செயலாளர் இல.அமுதன் வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் கோச்சடையில் மகா பெரியவர் விக்ரஹம் , பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. பிரார்த்தனை மலர்கள் நுால் வெ ளியிடப்பட்டது. ரோட்டோரஆதரவற்றோருக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.