பதிவு செய்த நாள்
28
மே
2021
04:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சத்ய சாய் சேவா சமிதி சார்பில், அரசு மருத்துவமனைக்கு, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டையில் சத்ய சாய் கோயில் உள்ளது. இங்குள்ள சத்ய சாய் சேவா சமிதியினர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு, மதிய உணவு வழங்கி வருகின்றனர். தினமும், 25 லிருந்து, 30 பேருக்கு, கடந்த, 20 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, சத்ய சாய் சேவா சமிதி சார்பில், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது. சமிதியின் கன்வீனர் அன்னபூரணா கணேஷ் தலைமையில், உறுப்பினர்கள் குரு கிருஷ்ணன், சாய் பிரசாத், நாகேஷ் மற்றும் சமிதி உறுப்பினர்கள் ஆகியோர் இயந்திரத்தை வழங்கினர். அரசு மருத்துவமனை டாக்டர்கள் சதீஷ்குமார், மனோகர், சரவணன, செவிலியர் கண்காணிப்பாளர் சாரதாமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.