ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்: இணைய தளம் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2021 07:05
ஆந்திரா: இந்தியா வில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 1.6 .2021 காலை 10 மணி முதல் அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 1.6 .2021 முதல் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் தேவஸ்தானத்தில் கொரோனா தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டும் பக்தர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் கோயிலில் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோரிக்கையின் படி காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 3 மணி நேரம் நாள் ஒன்றுக்கு பக்தர்களுக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் கோயிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவிட் விதிமுறைகளின் படி கோயில் தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும் . ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல் தற்போது நிலவி வரும் தொட்டு நாட்களில் பக்தர்கள் உடல்நிலை கருதி பக்தர்களின் வசதிக்காகவும ஆந்திர மாநில அறநிலைத்துறை ஆணையாளரின் அறிவுரையின் பேரில் இணைய தளம் மூலம் பக்தர்கள் ராகு-கேது சர்ப தோஷ பூஜைகள் உட்பட 12 விதமான ஆர்ஜித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் இணையதளம் மூலம் அவர்களுக்கு வேண்டிய சேவைகளுக்கான கட்டணத்தை இணையதளம் மூலமே செலுத்தி அவர்கள் பெயர் மற்றும் கோத்திரம் பெயர்களுடன் பூஜைகள் நடக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் குறித்து தேவஸ்தனம் போன்.08578 -222240 மூலம் அறிந்து கொள்ளலாம் என்று ஸ்ரீ காளஹஸ்தி கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார்.