ராய்ச்சூர்: ராய்ச்சூரின் தேவதுர்கா அருகே உள்ள ஹெக்கடதின்னி கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் மேலும் கொரோனா பாதிப்பு இருக்க கூடாது என்பதற்காக மாருதேஸ்வரா கோவிலில் ருத்ராபிஷேகம் நடக்கிறது. நேற்று முன் தினம் துவங்கிய ருத்ராபிஷேகம் 16 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தினர் ருத்ராபிஷேகம் நடத்த உள்ளனர். மற்றவர்கள் வீட்டிலேயே ருத்ராபிஷேக பூஜை நடத்துவர்.