புதுச்சேரி கோவில்களில் அன்னதானம் திட்டம்: துவக்கி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2021 10:06
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு அறிவிப்பால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருவாய், உணவின்றி தவித்தனர். அதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தினார். இதன்படி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் நேற்று துவக்கி வைத்தார். அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இத்திட்டம் வேத புரீஸ்வரர் வரதராஜப்பெருமாள் கோயிலிலும் துவக்கப்பட்டுள்ளது.