பதிவு செய்த நாள்
05
ஜூன்
2021
03:06
திருப்பூர்: ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் தற்காலிகமாக பயன்படுத்த, ஆக்சிஜன் செரிவூட்டிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பாதித்தவர்கள், ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்தபடி சிகிச்சை பெற்று குணமடைகின்றனர். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றதும், சில வாரங்கள் வரை மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறது.அத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை சில நாட்களுக்கு இலவசமாக வழங்கி உதவுகிறது. திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனத்துக்கு, நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படுவோர், 044 40115500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நிர்வாகிகள் கூறுகையில், தொற்று குணமாகி, வீடு திரும்பியவர்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டி தேவையெனில் தொடர்பு கொள்ளலாம். ஐந்து நாட்கள் வரை பயன்படுத்த இலவசமாக வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறை எண்ணில் பதிவு செய்தவர்கள் விவரம், மாவட்ட குழுவுக்கு தெரிவிக்கப் படும்.டாக்டர் பரிந்துரை கடிதத்துடன் வருவோர், ஆதார் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை எடுத்துச்சென்று, ஐந்து நாட்கள் பயன்படுத்திவிட்டு, திரும்ப வழங்கிவிடலாம், என்றனர்.