சித்தூர் மாவட்ட சிவன் கோயிலில் தரிசன நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2021 07:06
சித்தூர் : சித்தூர் மாவட்ட சிவன் கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தரிசன நேரங்களை நீட்டிப்பதாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார் .அவர் விடுத்த அறிக்கையில் ஆந்திர அரசு ஊரடங்கு உத்தரவு தளர்வு விடுத்ததை அடுத்து காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை நீடித்ததால் கோயிலில் தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார் . இனி வரும் நாட்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்றார் .இதேபோல் இச்சமயங்களில் கோயிலில் நடக்கும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபடலாம் என்றும் ஆனால் கோயிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோயில் சார்பில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார்.