தேனி: வைகாசி 4வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று (11ம் தேதி) தேனி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வழிபாடில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.