பதிவு செய்த நாள்
19
ஜூன்
2021
02:06
குன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 141 கோவில்களில் பணிபுரியும் 228 அர்ச்சகர்களுக்கு, நிவாரண நிதியாக 9.12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஊதியம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் 4,000 ரூபாய் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, குன்றத்துார், சேக்கிழார் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில், அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, அர்ச்சகர்களுக்கு ரொக்கம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, காஞ்சி புரம் மாவட்டத்தில், ஊதியம் இன்றி, 141 கோவில்களில் பணிபுரியும் 228 அர்ச்சகர்களுக்கு, நிவாரண நிதியாக, 9 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, என, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.