காரைக்கால் மாங்கனி திருவிழா: பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2021 10:06
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாயொட்டி நேற்று இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நேரம் சுவாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கோவில் நிர்வாகம்,உபயதரர்கள் ஆகியோரை கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று கைலாசநாதர் கோவில் வளாகத்தில் காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது.அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது.இன்று 23ம் தேதி ஸ்ரீபிட்சாடணமூர்த்தி பஞ்சமூர்த்திகள் மகா அபிேஷகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி தேதி காலை ஸ்ரீபிட்சாடண மூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியில் உட்பிரகாரத்தில் மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படைத்தல்,இரவு 8மணிக்கு பரமதத்த செட்டியார் இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது. மாங்கனி நிகழ்ச்சிகள் அனைத்து பக்தர்கள் நலன்கருதி (www.karaikaltemples.com) என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.