பாரனூர்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கலங்காப்புளி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கும்பநீர், வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.