பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
01:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தரிசன கட்டணம் வசூலித்ததில், மூன்று ஆண்டுகளில், 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கோவில்களில் பொது தரிசனம் உண்டு என்றாலும், கட்டணம் செலுத்தி விரைவாக அம்மன், சுவாமியை தரிசிக்க, 100 ரூபாயும், அம்மனை மட்டும் தரிசிக்க, 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி, மூன்று ஆண்டுகளில் 30.76 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, கோவிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ளது. அலைபேசி பாதுகாப்பு கட்டணமாக முன்பு, 10 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வகையில் கோவிலுக்கு, 4 கோடியே 55 லட்சத்து 67 ஆயிரத்து 635 ரூபாய் கிடைத்துள்ளது.