இருவர் இடையே பகைமை ஏற்பட்டு, அவர்களில் ஒருவருக்கு ஏதேனும் துன்பம் வந்துவிட்டால், இன்னொருவர் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார். இத்தகைய செயல்பாடு இஸ்லாமிய மனப்பான்மைக்கு மாறானதாகும். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன், ஒவ்வொரு மனிதனையும் தனது சகோதரனாகவே பார்க்க வேண்டும். தன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு, மகிழ்ச்சியடையக் கூடாது. கருத்துவேறுபாடு வருவது இயற்கை. அதற்காக ஒருவருக்கு துன்பம் வந்துவிட்டால், கைகொட்டி சிரிப்பவன், இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல! இறைவனால் இப்போதேகூட, தண்டனை பெற வேண்டியிருக்கும். உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து, அந்த துன்பத்தை களைந்து விடுவான். உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடுவான், என்கிறார் நபிகள் நாயகம்.