சிவகங்கை: சிவகங்கை கவுரி விநாயகர் கோவில் நில ஆக்கிரமிப்பை மீட்பதில் தொய்வு ஏற்பட்டதால், கோவில் நிர்வாக அதிகாரி மாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர் சரவணன் ஆக்கிரமித்த 9 ஏக்கர் 58 சென்ட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர். அங்கு கட்டப்பட்டிருந்த கட்டுமானமும் இடித்து அகற்றப்பட்டது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜனை அறநிலையத் துறை பணியிட மாற்றம் செய்துள்ளது. புதிய நிர்வாக அதிகாரியாக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் 34 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. படிப்படியாக தொடர்ந்து கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும், என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.