ராமேஸ்வரம் கோயில் வருவாய் ரூ.10 கோடி : 10 ரூபாய் டம்ளருக்கு வழி இல்லையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2021 09:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் ஓராண்டு உண்டியல் வருவாய் ரூ. 10 கோடி, ஆனால் குடிநீர் குடிக்க 10 ரூபாய்க்கு டம்ளர் வாங்க வசதி இல்லையா என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் 30 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் (ஊரடங்கு தவிர்த்து) தரிசிக்கின்றனர். இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் ரூ. 80 முதல் 90 லட்சம் வரை அதாவது ஓராண்டில் சராசரி ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, இலவச தங்கும் வசதி இல்லாமல், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் ஜூலை 5ல் ராமேஸ்வரம் கோவில் திறந்ததும். 41 நாட்களுக்கு பின் சுவாமி, அம்மனை தரிசித்து மன நிம்மதியுடன் சென்ற பக்தர்கள், முதல் பிரகாரத்தில் சுவாமி சன்னதி அருகில் உள்ள குடிநீர் குழாயில் தாகம் தணித்து செல்வது வழக்கம். ஆனால் அங்கு குடிக்க டம்ளருக்கு பதிலாக பழைய காலி குடிநீர் பாட்டிலை பாதியாக அறுத்து கோவில் நிர்வாகம் போட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 10 கோடி காணிக்கை ஈட்டும் இக்கோயிலில், 10 ரூபாய்க்கு டம்ளர் வாங்க வசதி இல்லையா. இதனை கோயில் அதிகாரிகள் கவனிக்காதது ஏன்? என பக்தர்கள் வேதனையுடன் தாகம் தணித்து சென்றனர்.