தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, கணபதி ேஹாமம், தன்வந்திரி ேஹாமம், பூர்ணாஹூதி வைபவங்கள் நடந்தது. சுவாமிகள் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு வருடாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து ராதா ருக்மணி தேவியருக்கு நவநீத கிருஷ்ணருடன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.