திருக்காஞ்சி கோவிலில் புதிய சன்னதி அமைக்க அமைச்சர் பூமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 02:07
வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராகநதீஸ்வரர் கோவிலில், வினாயகர் மற்றும் முருகனுக்கு புதிய சன்னதி அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராகநதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆகம விதிப்படி வடக்கு பகுதியில் கோவில் கோபுரம் அருகே ரூ.5 லட்சம் செலவில் துவார வினாயகர் சன்னதி அமை க்கப்பட உள்ளது. தெற்கு கோபுரம் அருகே ரூ.5 லட்சம் செலவில் முருகனுக்கு தனி சன்னதிஅமைய உள்ளது. இதற்கான பணியை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார். வினாயகர் சன்னதியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் செலவில் அமைய உள்ளது. நன் கொடையாளர்கள் சார்பில் முருகன் சன்னதி அமைகிறது. விழாவில் கோவில் சிறப்பு அதிகாரிகள் சீத்தாராமன், மனோகர், சேக ர், அறங்காவலர் குழுநிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.