சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம் கோயி லின் நான்கு கோபுரவாசல் வழியாக நுழைந்துள்ளனர். கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கில் திருநாவுக்கரசரும், வடக்கில் சுந்தரரும், தெற்கில் திருஞானசம்பந்தரும் வந்ததாகச் சொல்வர். இவர்களில் அப்பர் எனப்பட்ட நாவுக்கரசர், தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து நடராஜரை வழிபட்டார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம், நீலகண்டர், சேந்தனார் போன்ற அடிய õர்களின் வாழ்க்கையோடும் இக்கோயில் தொடர்புடையது.