வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2021 04:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது.
ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடலரசன் நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று தான் ஆனி திருமஞ்சனம். இன்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் சபையில் காலை 7:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், ஷோடசோபசார தீபாராதனை நடந்தது. நடராஜர் அபிஷேகத்தை காண்பது பிறவிப்பயன் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே இந் நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர். சிவாச்சாரியார்கள் முன்னின்று நடத்த, இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.