பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
10:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காலியாக உள்ள, 50 பணியிடத்திற்கு, மூன்று நாளில், 2,500 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில், தொழில்நுட்ப அலுவலர், ஓட்டுனர், அர்ச்சகர்கள், மேளம், தாளம் உட்பட மொத்தம், 50 காலி பணியிடங்களுக்கு, கடந்த, 13ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்படுகிறது.ஆதார் கார்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே, முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில், 100 ரூபாய்க்கு விண்ணப்பம் விற்பனை செய்யப்படுகிறது.மூன்று நாட்களாக விண்ணப்பங்கள் வாங்குவதற்கு, காலை, 6:30 மணி முதலே, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் கோவில் அலுவலகத்திற்கு காத்திருக்கின்றனர்.காலை, 9:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படுகிறது. நேற்று வரை, 2,500 பேர் விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளனர்.அடுத்த மாதம், 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. அன்றே கடைசி நாளாகும். விண்ணப்பம் பெற வரும் இளைஞர்கள் சமூக விலகல் இல்லாமல், கும்பலாக சென்று, முட்டி மோதி விண்ணப்பம் பெறுகின்றனர்.