சூலூர்,: சூலூர் வட்டார சிவாலயங்களில், நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது. சூலூர் வட்டார சிவாலயங்களில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று காலை நடந்தன. சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், சூலூர் சிவன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.