Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஆனி ராசிபலன் ரிஷபம் : ஆடி ராசிபலன் ரிஷபம் : ஆடி ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மேஷம்: ஆடி ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: ஆடி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
04:07


அசுவினி:
சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறும் அசுவினி நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த மாதம் சில காரியங்களில் அவசரமாக செயல்படத்  தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள்.  மனதடுமாற்றம் ஏற்படலாம். தொழில் ஸ்தானம் நடுநிலைமையாக இருக்கிறது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய  ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி  செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து  வேற்றுமை உண்டாகலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் நன்மைகள்  நடக்கும் காலகட்டம். அரசியல்துறையினர் எதிர்காலம் தொடர்பாக முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19, 20 - ஆகஸ்டு 15
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 03, 04, 05

பரணி:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய பரணி நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்கள்  எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம்  காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.  குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு  மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் சிறக்கும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையையும்  செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 20, 21 - ஆகஸு 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 04, 05, 06

கார்த்திகை - 1:
எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட கிருத்திகை நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த மாதம் திடீர்  கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல்  நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல்  அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்கள்  வீண் அலைச்சல் குறையும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.  கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாள் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறந்தது.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 06, 07

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar