Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஆடி ராசிபலன் விருச்சிகம் : ஆடி ராசிபலன் விருச்சிகம் : ஆடி ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம் : ஆடி ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம் : ஆடி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
04:07

சித்திரை - 3, 4:
சாமர்த்தியமாக செயல்படும் சித்திரை நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். சுபச்செலவு ஏற்படும். உடல்சோர்வு அகலும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும் மற்றவர்களால் ஆதரவு பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் இருக்கக்கூடிய தெக்க நிலை மாறும்.  மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள்  சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி  நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது  நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.  கலைத்துறையினர் தொழிலில் ஏற்றம் காண்பார்கள். அரசியல்துறையினர் பதவி பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள்  ஏற்படலாம்.

பரிகாரம்:  கருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 01, 02
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 17, 18
 
சுவாதி:
வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட சுவாதி நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள்  சாதகமாக முடியும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம்  வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். பெண்கள் எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க  நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும்  முழு கவனம் தேவை.

பரிகாரம்: ஏரிகாத்த ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு  02
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 18

விசாகம் - 1,2, 3:
எளிதில் கோபம் அடையாமல் பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட விசாக நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம்  உண்டாகும். பணவரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம்  ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில்  ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை  உதாசீனப்படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு  03
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 19

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar