சபரிமலையில் நடை திறப்பு: 5 மாதங்களுக்கு பின்னர் தரிசனம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 11:07
சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. ஐந்து மாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்று முதல் தரிசனம் நடத்துகின்றனர்.
கொரோனாவால் கடந்த மாசி மாத பூஜைகளுக்கு பின்னர் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு ஆடி மாத பூஜையில் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று முடிந்தது. இரண்டு தடுப்பூசி அல்லது 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாத பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜூலை 21 வரை அனைத்து நாட்களிலும் நெய்யபிேஷகம், கணபதிேஹாமம், உஷபூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். ஜூலை 21 இரவு 10:00 மணிக்கு நடைஅடைக்கப்படும். இன்று காலை நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக இந்த மாத பூஜைகளை தந்திரி கண்டரரு ராஜீவரரு நடத்த வேண்டும். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்துகிறார்.